என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சூரங்குடி-எட்டையபுரம் வரை சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கான இடத்தை எம்.எல்.ஏ. ஆய்வு
- மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதி முழுவதும் சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து சாலை ஓரங்களில் எந்த வகையான மரக்கன்றுகள் நடுவது என்பது பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு கலந்துரையாடினார்.
விளாத்திகுளம்:
மார்கண்டேயன் எம்.எல்.ஏ. முயற்சியால் விளாத்திகுளம் தொகுதியை பசுமையான தொகுதியாக மாற்றும் முயற்சியாக விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதி முழுவதும் சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது சூரங்குடி- எட்டையாபுரம் வரையிலான சுமார் 35 கிலோமீட்டர் சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கான சாலை ஓரங்களில் உள்ள சீமை கருவேலம் மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து சாலை ஓரங்களில் எந்த வகையான மரக்கன்றுகள் நடுவது என்பது பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகி ராகவன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், விளாத்திகுளம் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.