search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈஷா மகாசிவராத்திரி விழாவில் முன்னணி கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள்
    X

    ஈஷா மகாசிவராத்திரி விழாவில் முன்னணி கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள்

    • 25 ஆண்டுகளுக்கு மேலாக மிக விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது.
    • இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்து கொள்ள உள்ளனர்.

    கோவை,

    கோவை ஈஷா ேயாகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மிக விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

    குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப் புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்று பக்தர்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்து கொள்ள உள்ளனர்.

    இது தவிர, கேரளாவைச் சேர்ந்த 'தெய்யம்' நடன குழுவினர், கர்நாடகாவை சேர்ந்த ஜனபாடா நாட்டு புற நடன கலைஞர்கள், ஜார்ஜியாவை சேர்ந்த நடன கலைஞர்களும் விழாவை ஆட்டம், பாட்டத்துடன் அதிர செய்ய உள்ளனர்.

    வருகிற 18-ந் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் இவ்விழா ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ - டியூப் சேனலான சத்குரு தமிழில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. மேலும், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூ - டியூப் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    கடந்தாண்டு நடந்த ஈஷா மகா சிவராத்திரி விழாவை சுமார் 14 கோடி பேர் நேரலையில் பார்த்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×