search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டிற்கு குடும்பத்துடன் திரண்டு வரவேண்டும் - மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு
    X

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் பேசியபோது எடுத்த படம்.

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டிற்கு குடும்பத்துடன் திரண்டு வரவேண்டும் - மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு

    • மதுரை மாநாட்டிற்கு செல்வது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
    • எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காத தொண்டர்கள் அ.தி.மு.க.வில் உள்ளதால் யாராலும் அதனை அழிக்க முடியாது என்று சண்முகநாதன் பேசினார்.

    தூத்துக்குடி:

    அ.தி.மு.க. பொதுச்செ யலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு செல்வது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

    இதில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு அதிக அளவில் கட்சி நிர்வாகிகள் செல்வது குறித்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் . ஜெயலலிதா காலத்தில் 1½ கோடி தொண்டர்களாக இருந்ததை தற்போது பொதுசெயலாளர் எடப்பாடியார் 2 கோடியே 47 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்துள்ளார். உலகளவில் தரவரிசை பட்டியலில் 7-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. உருவாகி உள்ளது. நாம் தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொண்டர்களின் உற்சா கத்துடன் செயல்படுவதன் காரணமாக விரைவில் தி.மு.க. அரசு வீட்டிற்கு அனுப்பப்படும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த மாநாடு அமையும்.

    கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டிற்கு குடும்பத்துடன் திரண்டு வர வேண்டும். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காத தொண்டர்கள் அ.தி.மு.க.வில் உள்ளதால் யாராலும் அதனை அழிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் சுதாகர், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் சந்தனம், தெற்கு மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் சுகுமார், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், ராஜ்நாரயணன், சவுந்தரபாண்டி, பகுதி கழக செயலாளர்கள், முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, சார்பு அணி செயலாளர்கள் தட்டார்மடம் ஞானபிரகாசம், டாக்டர் ராஜசேகர், யு.எஸ்.சேகர், டேக் ராஜா, நடராஜன், பில்லாவிக்னேஷ், தனராஜ், பிரபாகர், அருண்ஜெபக்குமார், சுதர்சன்ராஜா, நகர செயலாளர்கள் காயல் மவுலானா, மகேந்திரன், பேரூராட்சி செயலாளர்கள் ரவிச்சந்திரன், காசிராஜன், செந்தில்ராஜகுமார், துரைச்சாமி ராஜா, அசோக்கு மார், கிங்சிலிஸ்டார்லின், ஆறுமுகநயினார், வேதமாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கில் மந்திர மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செ யலாளர் சத்யாலெட்சுமணன், எம்.பெருமாள்,எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலு முத்து, வக்கில்கள் சுகந்தன்ஆதித்தன், ஆண்ட்ருமணி, முனியசாமி, சரவணபெருமாள், பிள்ளை விநாயகம்,பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், துணை செயலாளர் டைகர் சிவா,வட்ட செயலாளர்கள் முருகன், மணிகண்டன், மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×