search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி
    X

    வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி

    • வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வெற்றிலை சுமைகளை வாங்கி செல்கின்றனர்.
    • கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை வகைகளை பயிர் செய்துள்ளனர்.

    வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றி லைகளை பறித்து 100 வெற்றி லைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், 104 கவுளிகள் கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் இதனை பரமத்திவேலூர் - கரூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல் பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வெற்றிலை சுமைகளை வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் வெள்ளைக் கொடி வெற்றிலை இளம் பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்துக்கும், முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3500-க்கும் விற்பனை யானது. கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

    நேற்று வெள்ளைக் கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.ஆயிரத்து 500-க்கும் வாங்கிச் சென்றனர். வெற்றிலை வரத்து அதிக ரிப்பாலும், முக்கிய நிகழ்ச்சிகள் இல்லாததாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×