என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மூதாட்டியை கொலை செய்த கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை
- வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியும், நல்லம்மாளை கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தனர்.
- மர்ம கும்பலை பிடிக்க கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் குச்சிக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி நல்லம்மாள் என்கிற சின்னப்பிள்ளை.
கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியும், நல்லம்மாளை கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடிகளை தூவி விட்டு சென்றனர்.
மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தை நேற்று காலை அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் வந்தனர்.
பின்னர் சண்முகத்தை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த நல்லம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிற்குள் பல்வேறு பகுதிகளில் கைரேகை பதிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில் கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படையினர் சம்பவம் நடந்த சண்முகத்தின் வீடு உள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மற்றும் சம்பவ நடைபெற்ற நேரத்தில் அப்பகுதி உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான எண்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு நீடித்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்