search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்குரூ.30 ஆயிரம் மானியம், இடுபொருட்கள்
    X

    கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்குரூ.30 ஆயிரம் மானியம், இடுபொருட்கள்

    • மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு காய்கறி பயிர் சாகுபடி, ஆடுகள், தற்காலிக மண்புழு படுக்கை, தேனீ பெட்டிகள் உட்பட ஹெக்டருக்கு ரூ.30 ஆயிரம் பின்னேற்பு மானியமாகவும், இடுபொருட்களாகவும் வழங்கப்பட உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை மூலம் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களான பெருங்குறிச்சி, திடுமல், தி.கவுண்டம்பாளையம் மற்றும் கோப்பணம்பளையம் ஆகிய கிராமங்களில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு காய்கறி பயிர் சாகுபடி, ஆடுகள், தற்காலிக மண்புழு படுக்கை, தேனீ பெட்டிகள் உட்பட ஹெக்டருக்கு ரூ.30 ஆயிரம் பின்னேற்பு மானியமாகவும், இடுபொருட்களாகவும் வழங்கப்பட உள்ளது.

    திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், ஒரு ஹெக்டர் பரப்பளவில் காய்கறி பயிர் சாகுபடி செய்திட வேண்டும். ஏற்கனவே ஆடுகள் வைத்தி ருப்பவராக இருக்கக்கூடாது. திட்ட பயனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருத்தல் கூடாது. ஆதி திராவிடர், பழங்குடி இன விவசாயிகள் மற்றும் பெண் விவசாயி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலவுடைமை ஆவணங்க ளான சிட்டா, அடங்கல், ஆதார் எண் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2 ஆகியவற்று டன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×