என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில் இரவில் பெய்யும் மழையால் வெப்பம் தணிந்தது
- குமாரபாளையம் , சுற்றுப்புற பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலை முதலே மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது.
- இரவில் மழை கொட்டியது. குமாரபாளையம் பஸ் நிலைய பகுதியில் பெய்த மழையால் கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் நிலைய கடைகளின் வழியாக ஓடியது
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலை முதலே மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. பின்னர் இரவு தொடங்கிய கனமழை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலையோர வியாபாரிகள், இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் பெரிதும் பாதிப்படைந்தனர். சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் இரவில் மழை கொட்டியது. குமாரபாளையம் பஸ் நிலைய பகுதியில் பெய்த மழையால் கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் நிலைய கடைகளின் வழியாக ஓடியது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இந்த நிலையில் குமாரபாளையம் பகுதியில் மழை நீடிப்பதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.