என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நாமக்கல்லில் காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு நாமக்கல்லில் காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு](https://media.maalaimalar.com/h-upload/2023/10/03/1959910-4.webp)
நாமக்கல்லில் காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காந்திஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
- மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன் உத்தரவின் பேரில் 60 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாமக்கல்:
காந்திஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆய்வு
காந்திஜெயந்தியை முன்னிட்டு இவ்விதிமுறைகள் முைறயாக பின்பற்றப்படுகிறதா? என்பது தொடர்பாக நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் திருநந்தன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்படி ஓட்டல்கள், வாகன பழுது பார்க்கும் பட்டறைகள், கடைகள் உள்ளிட்ட மொத்தம் 82 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 60 நிறுவனத்தினர் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன் உத்தரவின் பேரில் 60 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.