என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஜேடர்பாளையம் அணைக்கட்டில் பொதுமக்கள் குளிக்க தடை
- காவிரி ஆறு பாய்ந்து சென்றாலும், இடையில் சுற்றுலாத்தலம் இல்லாமல் இருப்பது, ஒரு குறையாகவே இருந்து வந்தது.
- ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள ராஜா வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிபா ளையம், ஜேடர்பாளையம், பரமத்திவேலுார், மோகனுார் வழியாக காவிரி ஆறு பாய்ந்து சென்றாலும், இடையில் சுற்றுலாத்தலம் இல்லாமல் இருப்பது, ஒரு குறையாகவே இருந்து வந்தது.
கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஜேடர்பா ளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுப்பணித் துறை பூங்கா அமைக்கப்பட் டது. மேலும், செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளை யாடக்கூடிய சீசா போன்ற வையும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில், ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து, பூங்காவில் பொழுதை குதூ கலமாக கழித்து ஜேடர்பா ளையம் அணைக் கட்டு பகுதியில் குளித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள னர்.
இந்நிலையில் தற்போது ஜேடர்பாளையம் அணைக் கட்டு பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள ராஜா வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வாய்க்கால் மற்றும் அணைக்கட்டு பகுதியில் குளிக்கும் இளைஞர்கள் நீரில் மூழ்கி இறக்கின்றனர். கடந்த மாதம் மட்டும் 4 பேர் உயிரிழந்த உள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அங்கு குடிபோ தையில் இளை ஞர்கள் குளிக்க வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி, தற்காலிகமாக ஜேடர்பாளை யம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்துள்ளனர். ஜேடர்பா ளையம் அணைக்கட்டு பூங்காவிற்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி, குளிக்க அனுமதி கிடையாது என்று பொதுப்ப ணித்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.