என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் சாவு
- நிலை தடுமாறி சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.
- சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடகா மாநிலம், பெங்களூரு கஞ்சகொண்டாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அப்துல்சாகிப் (வயது29). இவர் செருப்பு வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே அப்துல்சாகிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story






