என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் விரைவில், திறன் மேம்படுத்தப்பட்ட பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை- 2ஜி, 3ஜி சிம்கார்டுகளை 4ஜிக்கு மாற்ற கோரிக்கை
- தற்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது.
- பி.எஸ்.என்.எல். மொபைல் டேட்டா வேகம் போட்டி யாளர்களை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பிஜிபிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் வெகு விரைவில் திறன் மேம்படுத்தப்பட்ட முழு அளவிலான 4ஜி சேவையை தொடங்க பி.எஸ்.என்.எல். தயாராகி வருகிறது.
அரசாங்கத்தின் ஆத்மநிர்பார் பாரத் முயற்சியின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சிறந்த 4ஜி தொழில்நுட்பம் மூலம் இந்த 4-வது தலைமுறை மொபைல் நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக நெல்லை மாவட்ட மொபைல் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பயன் கிடைக்க இருக்கிறது.
தற்போதைய நெட்வொர்க்கின் டேட்டா வேகம் மற்றும் தரம் வரும் நாட்களில் நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட உள்ளது. இந்த நவீன 4ஜி உபகரணங்களை டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் பி.எஸ்.என்.எல்.-க்கு வழங்குகிறது.
உள்நாட்டிலேயே தயாரான இந்த 4ஜி தொழில்நுட்ப உருவாக்கத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கீழ் உள்ள ஆய்வுப் பிரிவான சென்டர் பார் டிப்பார்ட்மென்ட் ஆப் டெலிமேடிக்ஸ் மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வரும் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ஆகியன முக்கிய பங்காற்றி வருகின்றன.
உள்நாட்டிலேயே தயாரான இந்த 4ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான முதல் கட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 309 டவர்களும், 10 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையுடன் மேம்படுத்தப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படுகிறது. பி.எஸ்.என்.எல். மொபைல் டேட்டா வேகம் போட்டி யாளர்களை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்ப மேம்படுத்தலின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அனைத்து டவர்களும 5ஜி திறன் கொண்டதாக இருக்கும். மேலும் மென்பொருள் மேம்படுத்தல் மூலம் 5ஜி-க்கு எளிதாக மாற்ற கூடவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேலும் கூடுதலாக 46 புதிய 4ஜி டவர்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். மொபைல் கவரேஜ் மேம்படுத்தப்படுகிறது. மொபைல் நெட்வொர்க் செயல்பாடு மற்றும் பிற இயக்க அளவீடுகளின் அடிப்படையில் பி.எஸ்.என்.எல். நெல்லை சமீபத்திய காலங்களில் இந்திய அளவில் உயர்ந்த இடத்தை பிடித்து வருகிறது. தற்போது புதிதாக திட்டமிடப்பட்ட நெட்வொர்க் மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கம் முடிந்ததும் பி.எஸ்.என்.எல் மொபைல் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவமும் சேவையின் தரமும் மிகவும் சிறப்பாக இருக்க தக்க நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பி.எஸ்.என்.எல்.ன் இந்த மேம்பட்ட 4ஜி சேவைகளைப் பெறுவதற்கு, தற்போது பி.எஸ்.என்.எல். 2ஜி, 3ஜி சிம்களை வைத்திருக்கும் வாடிக்கை யாளர்கள், அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கை யாளர் சேவை மையங்கள், பிரான்சைசி அலுவலகங்கள் மற்றும் மேளா நடைபெறம் இடங்களில் கட்டணமின்றி இலவசமாக பி.எஸ்.என்.எல். 4ஜி சிம்களாக மாற்றி கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்