என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நடைமேடையில் கிடந்த ரூ. 1 லட்சம்-டிக்கெட் பரிசோதகர் எடுத்து போலீசில் ஒப்படைத்தார்
Byமாலை மலர்24 Jun 2022 3:13 PM IST
- பாபநாசம் நடைமேடையில் ஒரு பாலித்தீன் கவர் கிடந்தது.
- பஸ் நிலையத்தில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகரின் நேர்மையை சக அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.
நெல்லை:
பாளை கக்கன்நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.
ரூ. 1 லட்சம்
நேற்று இவர் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள பாபநாசம் நடைமேடையில் ஒரு பாலித்தீன் கவர் கிடந்தது. அதனை சண்முகசுந்தரம் எடுத்து பார்த்த போது அதில் ரூ. 1 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்தை அவர் மேலப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பணம் யாருக்கு சொந்தமானது? பணத்தை காணவில்லை என யாரேனும் புகார் செய்துள்ளார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாராட்டு
இந்நிலையில் பஸ் நிலையத்தில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகரின் நேர்மையை சக அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story
×