search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்- எம்.எல்.ஏ. உறுதி
    X

    அரசு பள்ளி மாணவிகளுடன், ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்துரையாடினார்.

    அரசு பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்- எம்.எல்.ஏ. உறுதி

    • பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • வகுப்பறை மட்டும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது அவரிடம், இதுவரை பழுதடைந்த 8 வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதால் பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆய்வக கட்டடம் இல்லா மல் மாணவர்கள் சிரம ப்படுவதாகவும் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்க ப்பட்டது.

    அப்போது, வகுப்பறை மட்டும் ஆய்வக கட்ட டம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ப்படுமென ஷாநவாஸ் எம்.எல்.ஏ உறுதியளித்தார். அத்துடன், அங்கு நடை பெற்று வரும் நீட் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்டப் போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், விலக்கு பெறும் வரையில், அத்தேர்வை துணிவுடன் எதிர் கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று மாணவ ர்களிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினர்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியா சுதீன், ரிபாயுதீன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×