search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி தாசில்தார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு-என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
    X

    தாசில்தார் செல்வகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்த காட்சி.


    தூத்துக்குடி தாசில்தார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு-என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

    • தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் என்.டி.பி.எல். அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் கடந்த 2 நாட்களாக அனல்மின் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சி.ஐ.டி.யு. சார்பில் நிர்வாகிகள் ரசல், பேச்சுமுத்து, அப்பாத்துரை, கணபதிசுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்கவும், ஓய்வூதியம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் அது தொடர்பாக பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

    Next Story
    ×