என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூடப்படாத சாக்கடை வாறுகால்
நெல்லை டவுனில் சாக்கடை வாறுகால் குழியில் விழுந்து முதியவர் காயம்
- டவுன் பாரதியார் தெரு அம்மன் சன்னதி சந்திப்பில் மூடப்படாத சாக்கடை வாறுகால் உள்ளது.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் பாரதியார் தெரு அம்மன் சன்னதி சந்திப்பில் மூடப்படாத சாக்கடை வாறுகால் உள்ளது. இந்த வழியாக இன்று காலை சென்ற 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் எதிர்பாராத விதமாக அந்தக் குழிக்குள் உள்ளே விழுந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டனர்.
இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து முதியவரை அதில் ஏற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, சாலை மற்றும் சாக்கடை பராமரிப்புக்காக குழி திறக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் அது மூடப்படாமல் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இதனால் உயிரிழப்புகள் ஏற்படு வதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சரி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் பணியா ளர்கள் அங்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.






