search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம்
    X

    கருத்தரங்கில் மாநகராட்சி கல்வி குழு தலைவர் பவுல்ராஜ் பேசிய காட்சி. அருகில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள்.

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம்

    • பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் மாநகராட்சி கல்வி குழு தலைவர் பவுல்ராஜ் தலை மையில் நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ல் கூறியுள்ள படி அனைத்து பள்ளி களிலும் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி வேளாண்மை குழு மற்றும் அதன் செயல்பாடு களை பற்றி புரிதல் ஏற்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு நகர்புற உள்ளாட்சி பிரதிநிதி களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் மாநகராட்சி கல்வி குழு தலைவர் பவுல்ராஜ் தலை மையில் நடைபெற்றது.

    இதில் குழந்தை களுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ல் கூறியுள்ள படி அனைத்து பள்ளி களிலும் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி வேளாண்மை குழு மற்றும் அதன் செயல்பாடு களை பற்றியும், சட்டம் வலியுறுத்தும் குழந்தை களின் உரிமைகள் பற்றியும், மாநகர நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை பிரதிநிதிகளுக்கு எடுத்து கூறும் வகையிலும் பள்ளி வளர்ச்சி குழந்தை களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு குறித்து புரிதல் ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் பள்ளியில் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழுவில் நகர்புற ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பும், கட மையும் உணர்ந்து செயல்பட வலியுறுத்தவும், பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் பள்ளி வளர்ச்சி முன்னே ற்றம் மற்றும் பாதுகாப்பில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்கை மேம்படுத்தும் வகை யில் மாநகராட்சி கவுன்சி லர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடை பெற்றது.

    இக்கருத்தரங்கில் நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் துணைமேயர் கே.ஆர்.ராஜு,நிதிக்குழு தலைவர் சுதா மூர்த்தி, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி , கதீஜா இக்லாம் பாசிலா, ரேவதி மற்றும் கவுன்சிலர்கள் கோகுலவாணி சுரேஷ், உலகநாதன், ரவீந்தர், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கந்தன் ,இந்திரா மணி, சுந்தர், நித்ய பாலையா மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு , உதவி திட்ட அலுவலர் சிவராஜ் , நகர் வட்டார மேற்பார்வையாளர் செண்பகாதேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, ஆசிரியர் பயிற்று நர்கள் சுப்பிரமணியன், செல்வகுமார், மகளிர் திட்ட தொடர்பாளர் ரேவதி, பயிற்சியாளர் கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×