என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திண்டுக்கல் அருகே பெயிண்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது திண்டுக்கல் அருகே பெயிண்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/08/26/1938460-arrestnew.webp)
கோப்பு படம்.
திண்டுக்கல் அருகே பெயிண்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முனீஸ்வரன் கொலை வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே 7 பேரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- போலீசார் ரோந்து பணியில் வந்த போது அந்த வழியாக ஆம்னி வேனில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் சின்ன பொன்மாந்துறை யைச் சேர்ந்த மாசாணம் (37) என்பதும், முனீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள நடுமாலப்பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 29). பெயிண்டர். இவர் கடந்த ஜூலை 23ந் தேதி அவரது வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து அரிவாள், கத்தியால் சர மாரியாக வெட்டி முனீஸ்வ ரனை கொலை செய்தனர்.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.முனீஸ்வரன் கொலை வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே 7 பேரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன் தலைமையிலான போலீசார் பொன்மாந்துறை புதுப்பட்டி அருகே நல்லேந்திரபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஆம்னி வேனில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் சின்ன பொன்மாந்துறை யைச் சேர்ந்த மாசாணம் (37) என்பதும், முனீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாசாணத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.