என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி -நெல்லையில், அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- ஓ.பி.எஸ். தரப்பு தொடுத்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் நடனமாடி இனிப்புகள் வழங்கினார்.
நெல்லை:
கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்ககோரியும், கட்சியில் இருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரியும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான பி.எச். மனோஜ்பாண்டியன், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இதில் ஓ.பி.எஸ். தரப்பு தொடுத்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துப் பாண்டி, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செய லாளர்கள் மோகன், ஜெனி, சிந்து முருகன், காந்தி வெங்க டாச்சலம், பாளை பகுதி மாண வரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுரணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், நிர்வாகிகள் சம்சுசுல்தான், டால்சரவணன், தாழை மீரான் மற்றும் ஏராள மானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் தலைமையிலான நிர்வாகிகள் நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் நடனமாடி இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் வள்ளியூர் சுந்தர், பகுதி செயலாளர் மோகன், திருத்து சின்ன துரை, ஒன்றிய செய லாளர் மருதூர் ராம சுப்பிரமணியன், கவுன்சி லர் சந்திரசேகர், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.








