search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்தில், இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம்
    X

    இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம் நடந்தது.

    கும்பகோணத்தில், இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம்

    • இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலம் மனித குலத்தை நோய்களிலிருந்து விடுவிக்கலாம்.
    • விவசாயம் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர் இயற்கை விழிப்புணர்வு மையம் அறக்கட்டளை சார்பில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் ஆட்சிப் பேரவை உறுப்பினர் ரேணுகா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மாணவிகள் பூரணி, அருணா இறைவணக்கம் பாடினர்.

    நிகழ்ச்சிக்கு மூலிகை சேகர் தலைமை வகித்தார்.

    மலர் இயற்கை வேளாண் பண்ணை நிறுவனர் ஸ்ரீராம் வரவேற்புரை வழங்கினார்.

    இயற்கை விழிப்புணர்வு மையம் அறக்கட்டளைத் தலைவர் கோவி. திருவேங்கடம் வாழ்த்துரை வழங்கினார்.

    சீனிவாசநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் இளையராஜா, இயற்கை விவசாயிகள் மருத்துவக்குடி கும்பலிங்கம், நாச்சியார் கோயில் ராஜேந்திரன் மலையப்பநல்லூர் கேசவன், சீனிவாசநல்லூர் ஹேமா, கால்நடை மருத்துவர்கள் ஆனந்த், ஆனந்தி, நேரு யுவகேந்திரா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினர் ஆதலையூர் சூரியகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது:

    இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலம் மனித குலத்தை நோய்களிலிருந்து விடுவிக்கலாம். படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும்.

    உலகம் பொருளாதார சிக்கல்களில் சிக்கி இருக்கும்போது விவசாயம் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.

    சேவைத் துறையை விட தொழில் துறையை விட லாபம் குறைவாக இருந்தாலும் நிலையான நீடித்த வளர்ச்சிக்கு விவசாயமே உதவுகிறது.

    விவசாயத்தை நம்பி இருக்கும் பொருளாதாரம் எப்போதும் சரிந்து விழுவது இல்லை. எனவே படித்த இளைஞர்கள் விவசாயத்தை நோக்கி வர முன் வர வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியின் நிறைவில் இளந்துறை இயற்கை விவசாயி சுவாமிநாதன் நன்றி கூறினார். ஐம்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×