என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் பேசினார்.
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
- விளநகர் கிராமத்தில் சொந்த கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
- உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
ரஜினி:-
கொண்டத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை விரைந்து கட்டித்தர வேண்டும். பாகசாலை ஊராட்சி ஆதிதிராவிடர் சுடுகாட்டு சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும்.
தேவிகா:-
இலுப்பூர் ஊராட்சி வடக்கு தெரு, சிவன் கோயில் தெருவிற்கு தார்சாலை அமைத்து தர வேண்டும்.
முத்துலட்சுமி:-
விளநகர் கிராமத்தில் சொந்த கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
ஜெயந்தி:-
தில்லையாடி ஊராட்சி நாகப்பன் நகரில் அனைத்து தெருவிற்கும் புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்.
ராணி:-
முடிகண்ட நல்லூர் வண்ணாங்குளத்தில் படித்துறை கட்டித்தர வேண்டும். ராஜா தெரு மற்றும் திருச்சம்பள்ளி முதலியார் தெருவில் தார் சாலை அமைத்து தர வேண்டும். சொந்தக் கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
கிருபாவதி:-
நல்லாடை ஊராட்சி பனங்குடி பஸ் நிறுத்தம் அருகே புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்.
இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், தற்போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பொறியாளர் முத்துகுமார், அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






