என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பஞ்சாயத்து துணை தலைவர் பலி கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பஞ்சாயத்து துணை தலைவர் பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/08/21/1935681-2-kayatharu.webp)
முத்தையா
கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பஞ்சாயத்து துணை தலைவர் பலி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முத்தையா கடந்த மாதம் 16-ந்தேதி சுங்கச்சாவடி அருகில் சென்ற போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முத்தையா தூக்கி வீசப்பட்டார்.
- இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் முத்தையா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்தையா. இவர் வடக்கு இலந்தை குளம் பஞ்சாயத்து துணை தலைவர் இருந்து வந்தார்.
விபத்து
இந்நிலையில் இவர் கடந்த கயத்தாறில் இருந்து வடக்கு இலந்தைகுளம் நோக்கி தனது மோட்டார் சைக்கிள் சென்றார். அவர் சுங்கச்சாவடி அருகில் சென்ற போது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முத்தையா தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு கயத்தாறு சென்று அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் முத்தையா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தை யாவுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகன்களும் உள்ளனர்.