search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
    X

    கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டபோது எடுத்த படம்.

    நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

    • நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன
    • பங்குனி உத்திர திருவிழாவின் 10-ம் திருநாள் அன்று இரவு பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழா நடக்கிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக்காரணமானதுமான டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

    பங்குனி உத்திரம்

    அதன் ஒரு நிகழ்வாக பங்குனி மாதத்தையொட்டி இன்று பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. இதனையொட்டி சுவாமி சன்னதி உள் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது. இதற்காக காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    தொடா்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. பின்னர் கொடிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதும் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின் கொடிமரத்துக்கு மாபொடி, மஞ்சள், வாசனை பொடி, பால், தயிா், இளநீா், அன்னம், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    செங்கோல் விழா

    மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4-ம் திருநாளான்று ஆலயம் உருவான வரலாறு திருவிளையாடல் மற்றும் அன்று இரவு சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. 10-ம் திருநாள் அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற்பார்வையில் பணியாளர்கள், பக்தா்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×