search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம்

    • காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த 25-ம் தேதி மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
    • சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நேற்று காலை யாக பூஜைகளும், யாக வேள்வி நிறைவும், மஹா தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த

    25-ம் தேதி மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை காலை யாக பூஜைகள், மூலவர் அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், மாலையில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நேற்று காலை யாக பூஜைகளும், யாக வேள்வி நிறைவும், மஹா தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மாலை முருகப்பெருமான் சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு மேல் சூரசம்ஹார விழாவும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சூரனை வதம் செய்த முருகப்பெருமான் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில், பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    இதே போல் கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலிலும் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், பொத்தனூர் பச்சைமலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன், அனிச்சம்பா ளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், சக்தி விநாயகர் கோயிலில் உள்ள முருகன், எல்லை யம்மன் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விஜயகிரி பழனியாண்டவர், கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள முருகன், பாலப்பட்டியில் உள்ள கதிர்மலை முருகன் மற்றும் பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுக கடவுள் உள்ளிட்ட கோயில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

    இதில் ஏராளமான சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால முருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    Next Story
    ×