என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி, பழனி வழியாக கோவை - மதுரை இடையே நாளை முதல் பயணிகள் ெரயில் இயக்கம்
- மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் கோவை - நாகா்கோவில் ெரயிலில் வழக்கமாக கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
- கொச்சியில் இருந்து கோவை வழியாக கோா்பாவுக்கு இயக்கப்படும் வாராந்திர ெரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை
கோவையில் இருந்து மதுரைக்கு செல்ல, கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் கோவை - நாகா்கோவில் ரெயிலில் வழக்கமாக கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
பயணிகள் வசதிக்காக கோவை - மதுரை இடையே நேரிடையாக விரைவு ெரயில் இயக்க வேண்டும் என ெரயில் பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், கோவை - பழனி, பழனி - மதுரை வழித்தடத்தில் (06462, 06463) ஆகிய எண்களிலும், மதுரை - பழனி, பழனி - கோவை வழித்தடத்தில் (06479, 06480) ஆகிய எண்களிலும் இயக்கப்பட்டு வந்த கோவை - பழனி - மதுரை இணைப்பு ெரயில் வருகிற நாளை (1-ந் தேதி) முதல் கோவையில் இருந்து மதுரைக்கு (16721) என்ற எண்ணிலும், மதுரையில் இருந்து கோவைக்கு (16722) என்ற எண்ணிலும் முன்பதிவற்ற விரைவு ெரயிலாக இயக்கப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் கோட்ட ெரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையில் இருந்து நாளை (1-ந் தேதி) முதல் பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்படும் விரைவு ெரயில் (எண்: 16721) இரவு 7.35 மணிக்கு மதுரையைச் சென்றடையும். மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண்: 16722) பிற்பகல் 12.45 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும். இந்த ெரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு , பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி, சோழவந்தான், கூடல் நகா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கோவை வழியாக கோா்பாவுக்கு இயக்கப்படும் வாராந்திர ெரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாலக்காடு ெரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்கிழக்கு மத்திய ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட நாக்பூா் அருகே கச்சேவாணி பகுதியில் சிக்னல் பராமரிப்பு மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் கொச்சி - கோா்பா வாராந்திர விரைவு ெரயில் (எண்: 22648) நாளை (1-ந் தேதி) மற்றும் 5-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. கோா்பா - கொச்சுவேலி வாராந்திர விரைவு ெரயில் ( எண்: 22647) செப்டம்பா் 3 மற்றும் 7-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்