என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாவூர்சத்திரம்-பாதுகாப்பு பணியில் போலீசார் நிறுத்தப்படுவார்களா?
- குடிநீர், வாறுகால் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு அதனை சுற்றி இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.
- விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசி:
நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்தின் அருகே சாலையோரங்களில் குடிநீர் பைப் மற்றும் வாறுகால் பணிகள் மேற்கொள்வதற்காக மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு அதனை சுற்றி இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக பாவூர்சத்திரம் நான்கு முக்கு சாலையில் பணிகள் நடைபெற்று வருவதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அவ்வழியே செல்லும் போது நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று பெரும் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றி செல்லும் கனரக லாரிகள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் அந்தச் சாலை வழியாக செல்வதால் வாகனங்கள் அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழும் அபாய நிலையும் உள்ளது.
எனவே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க பாவூர்சத்திரம் நான்குமுக்கு சாலையில் வாகன நெருக்கடி ஏற்படாத வண்ணம் போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.