search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு-8 கடைகளுக்கு அபராதம்
    X

    மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு-8 கடைகளுக்கு அபராதம்

    • 40 கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 8 கடைகளிலிருந்து 1215 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    தமிழக அரசு சுற்றுச்சூ ழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் தடை விதிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோருக்கு அபராதமும் விதிக்க உத்தரவிட்டுள்ளது.

    அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லாவண்யா, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் உள்ளிட்டோர் நேற்று மேட்டுப்பாளையத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக கோவை சாலை, அண்ணாஜி ராவ் ரோடு, மார்க்கெட், ஊட்டி சாலைகளில் செயல்பட்டு வரும் 40 கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது,தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் கள்,பேப்பர் கப்புகள்,கேரி பேக்குகள், பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தட்டுகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்த 8 கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் என மொத்தமாக ரூ.80 ஆயிரம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.மேலும்,அக்கடைகளில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 1215 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    அதிகாரிகள் ஆய்வி ன்போது மேட்டுப்பாளையம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், சுகாதார மேற்பார்வை யாளர் மணி மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மேட்டுப்பா ளையம் நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை கடை உரிமையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பேசிய மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தங்களது அதிரடி நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×