என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
- ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை விசைப்படகு, இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
- தடை காலம் முடிந்த பின்னர் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை ஆழ்கடலில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப் படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி கடந்த 14-ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. இந்த தடை காலத்தில் குறிப்பிட்ட இனவகை மீன்கள் கிடைக்காமல் இருந்தது.
மீன்களின் விலையும் உச்சத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் தடைக்காலம் முடிந்து ஏற்கனவே மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் தமிழகத்தில் வழக்கமாக கிடைக்கும் மீன் வகைகள் தற்போது மார்க்கெட்டில் கிடைத்து வருகிறது.தடை காலம் முடிந்த பின்னர் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி தஞ்சை மீன் மார்க்கெட்டுக்கு இன்று ஏராளமான லாரிகளில் பல வகையான மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. பொதுமக்கள் காலையிலிருந்து மார்க்கெட்டுக்கு குவிய தொடங்கினர். தங்களுக்கு பிடித்தமான மீன்களை வாங்கி சென்றனர். இதனால் தஞ்சை மீன் மார்க்கெட்டில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதை போல் இறைச்சி கடைகளிலும் வழக்கம்போல் கூட்டம் காணப்பட்டது.