என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாமில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பொதுமக்கள்
- கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
- திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 3ம் அலைக்குப் பிறகு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 2500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்ப டுகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒருவாரமாக தொற்று அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 3 லட்சம் நபர்கள் 2-ம் தவணை செலு த்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 16,000 சிறார்கள் மற்றும் 12 முதல் 14 வயதிற்குட்பட்ட 15,000 சிறார்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர்.
மேலும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 16,000 சிறார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர். மேலும் மாவட்டம் முழு வதும் 2.5 லட்சம் நபர்கள் முன்னெச்சரிக்கை செலுத்து வதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திகொள்ள வேண்டும். மேலும் பொதுஇடங்களுக்கு வரும் போது முககவசம் அணிந்தும், சமூகஇைடவெளியை பின்பற்றவும் டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்