search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமணம் நடத்த அனுமதி
    X

    சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமணம் நடத்த அனுமதி

    • கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
    • ஆகஸ்டு 18- ந்தேதி முதல் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் முதற்க ட்டமாக திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க ப்படும்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த நிலையில் சிங்கரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஒரே நேர்கோட்டில் இருந்து வருவதால் ஒரே நாளில் 3 லட்சுமி நரசிம்மரை நேரில் சென்று தரிசனம் செய்தால் மக்களுக்கு துன்பம் நீங்கி கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் என்பதால், இக்கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்கு கோவில் நிர்வாகத்தினரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஆனால் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பா ட்டில் உள்ள கோவில் என்பதால் உரிய முறையில் அரசிடம் அனுமதி பெற்று, அதன் பிறகு கோவில் வளாகத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்து வந்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அனுமதி கேட்டு வந்தனர். இந்த நிலையில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமணம் செய்வதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் கூறியிரு ப்பதாவது: - சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவிலில் திருமணங்கள் நடத்துவதற்கு உரிய அனுமதியை இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் பெறப்பட்டுள்ளது. ஆகஸ்டு 18- ந்தேதி முதல் திருமணங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. எனவே கோவிலில் திருமணம் நடத்த விருப்பமுள்ளவர்கள் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்கள் வழங்கி முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி திருமணம் நடத்துவதற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அரசு, முதன்முறையாக திரும ணங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற ஆகஸ்டு 18- ந்தேதி முதல் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் முதற்க ட்டமாக திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க ப்படும். பின்னர் மக்களின் வரவேற்பு மற்றும் முன்பதிவு அதிக அளவில் நடைபெறுவதை ெபாறுத்து கோவில் வளாகப் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப திருமணங்கள் நடத்துவதற்கு அரசின் உரிய வழிகாட்டுதலின்படி என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பித்து திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்பதனை அதிகாரிகள் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி யதோடு அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கு ஏதுவாக அமையும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×