search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க  கோரி  கிராம மக்கள் மனு
    X

    மனு அளிக்க வந்த கிராம மக்கள்.


    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கிராம மக்கள் மனு

    • கடலோரப் பகுதிகளை சேர்ந்த மக்களும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • ஆலை மூடப்பட்டதால் வெளியூர்களில் குறைந்த வருவாயில் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சில்லாநத்தம், அய்யனடைப்பு, பண்டாரம் பட்டி, மடத்தூர், தெற்குவீரபாண்டியபுரம், மீளவிடான், சில்வர்புரம், சங்கரப்பேரி, சில்லாநத்தம் நயினார்புரம் தெற்கு சிலுக்கன் பட்டி, ராஜாவின் கோவில், நடுவக்குறிச்சி, குமாரரெட்டியாபுரம், சாமி நத்தம், கல்லூரணி ஆகிய கிராமங்களைச் சார்ந்த ஏராளமான பெண்கள், ஆண்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    இதேபோல் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளான மட்டக்கடை, திரேஸ்புரம், ராஜீவ் காந்தி நகர், சிலுவைபட்டி, பாத்திமா நகர், ஸ்டேட் பாங்க் காலனி, அன்னை தெரசா மீனவர் காலனி, லயன்ஸ் டோன், சென்ட் பீட்டர் கோவில் தெரு, அலங்கார தட்டு ஆகிய கடலோரப் பகுதிகளை சேர்ந்த மக்களும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    அதில், எங்கள் ஊரின் வாழ்வாதாரமாக விளங்கிய ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டதால் ஏராள மானோர் வேலையை இழந்துள்ளனர். எங்கள் குடும்பத்தை சேர்ந்த பலர் இங்கு நல்ல வருமானத்தில் வேலை பார்த்தனர். அவர்கள் தற்போது ஆலை மூடப்பட்டதால் வெளியூர்களில் சென்று குறைந்த வருவாயில் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை கிடைக்க ஆலை திறக்கப்பட வேண்டும். எங்கள் கிராமத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கிவரும் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்படவேண்டும். இந்த ஆலை திறக்கப்பட்டால் எங்கள் சந்ததிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்று கூறியிருந்தனர்.

    Next Story
    ×