என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் பேரூராட்சி சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு
- பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவரை அகற்றக் வேண்டும்.
- பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், கவுன்சிலர்களுடன் சேர்ந்து கோரிக்கை மனு வழங்கினார்.
தென்காசி:
ஆலங்குளம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் பொதுமக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவரை அகற்றக் வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த உயர் கோபுர மின் விளக்கை மீண்டும் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி தென்காசி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் கவுன்சிலர்கள் சுந்தர், ராஜதுரை ஆகியோருடன் சேர்ந்து கோரிக்கை மனு வழங்கினார்.
அப்போது தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, சேர்வைக்காரன்பட்டி ஊராட்சிமன்ற தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், ஊராட்சி தலைவர் ராம்குமார், முகமது யாகூப் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அஜய், இளைஞர் அணி அரவிந்த், பூதத்தான் அருணா பாண்டியன், குணா, ராஜபாண்டியன், நவீன் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா ஜெய் சிங் உள்பட பலர் உடனிருந்தனர்.