என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டி அமைச்சரிடம் மனு
- கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
- நல்ல அறிவிப்பு வரும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி தாலுக்காகவாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இது தொடர்பாக நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கேள்வி எழுப்பிய போது, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் இந்தக் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இம்மாதம் 20-ம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் திருமருகல் தனி தாலுகா அறிவிப்பு செய்ய வேண்டுமென, நேற்று சென்னையில் வருவாய்த் துறை அமைச்சரை ஷா நவாஸ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
நல்ல அறிவிப்பு வரும் என்று அமைச்சரும் உறுதியளித்தார்.
இதனால் திருமருகல் தனி தாலுகா அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நாகை தொகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.