என் மலர்
உள்ளூர் செய்திகள்
கடையம் அருகே பெட்டிக்கடையை உடைத்து கொள்ளை
- மர்ம ஆசாமிகள் கடையை உடைத்து , ரூ.300 மற்றும் தின்பண்டங்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
- மர்ம ஆசாமிகள் , வீட்டில் இருந்து லேப்-டாப் மற்றும் ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 57). இவர் மெயின் ரோட்டு பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் பின்புறமாக கடையை உடைத்து உள்ளே சென்று , ரூ.300 மற்றும் சில தின்பண்டங்களையும் திருடிச் சென்றுள்ளனர். அவர் கடையில் அதிகமான பணத்தை வைத்து செல்லாததால் பெரிய அளவில் திருட்டு சம்பவம் நடைபெறவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் (52 )என்பவருடைய வீட்டில், பட்டப்பகலில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் , வீட்டில் இருந்து லேப்-டாப் மற்றும் ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இதை யடுத்து கடையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடையம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே காவல் துறையினர் திருடர்களை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.