என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
- வேலைவாய்ப்பு முகாமில் கல்லூரி மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் துறையை சேர்ந்த 43 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனர்.
- துறை வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன அதிகாரிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் கிருஷ்ணகிரி, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி வளா கத்தில் கையெழுத்தானது.
வேலைவாய்ப்பு
இதில், கல்லூரி இயக்குநர் எஸ். சண்முகவேல், முதல்வர் கே. காளிதாச முருகவேல், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தைவான் கிளையின் மனிதவளத்துறை மேலாளர் பால் மற்றும் இந்திய மனிதவளத்துறை அதிகாரி சுவாதி கோயல் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற வளாக வேலைவாய்ப்பு முகாமில் கல்லூரி மெக்கா னிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் துறையை சேர்ந்த 43 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனர்.
கலந்துரையாடல்
முன்னதாக, கல்லூரி முதல்வர் வரவேற்று பேசினார். மின்னியல் மற்றும் மின்னணு பொறி யியல் துறைத்தலைவர் எம். வில்ஜூஸ் இருதயராஜன், எந்திர பொறியியல் துறை தலைவர் எஸ். அய்யாராஜா, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்துறை தலைவர் எஸ். தமிழ்செல்வி, மற்றும் துறை வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன அதிகாரி களில் கலந்துரையாடல் நடைபெற்றது.
முடிவில் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் வி. மணிமாறன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோர்களின் வழிகாட்டு தலின்படி தகவல் தொழில் நுட்ப பொறியியல்துறை தலைவர் கே. சீனிவாசகன், வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைத்து வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப் பாளர்கள் செய்திருந்தனர்.