search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 தேர்வில் பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
    X

    பர்கூர் வேளாங்கண்ணி பள்ளியில் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்து சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி, பள்ளியின் தாளாளர் கூத்தரசன், பொன்னாடை அணிவித்து, கேடயங்களை வழங்கினார். 

    பிளஸ்-2 தேர்வில் பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி

    • கார்த்திக் விஜய் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்ற மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    • பள்ளியின் தாளாளர் கூத்தரசன் பங்கேற்று, மாண வர்களுக்கு பொன்னாடை அணிவித்து, கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

    கிருஷ்ணகிரி, மே.9-

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியில் 2022-23ம் கல்வியாண்டில் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை சேர்த்துள்ளனர்.

    இதில், கார்த்திக் விஜய் என்ற மாணவர் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்ற மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    கிரேஸ் கிருஸ்டி 594, துளசிஸ்ரீ 594 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சுவாதி 593 மற்றும் சந்தியா 593 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், முகேஷ்வர் 592 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், கவிப்பிரியா 590 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்று உள்ளனர்.

    இந்த சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. இதில் பள்ளியின் தாளாளர் கூத்தரசன் பங்கேற்று, மாண வர்களுக்கு பொன்னாடை அணிவித்து, கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில், பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன், வேப்பனஹள்ளி முதல்வர் அன்பழகன், துணை முதல்வர் ஜலஜாஷி, திருப்பத்தூர் பள்ளியின் துணை முதல்வர் பூங்கா வனம், நிர்வாக அலுவலர் கவுரிசங்கர், பள்ளியின் பொறுப்பாளர் யுவராஜ், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இப்பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 20 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×