என் மலர்
உள்ளூர் செய்திகள்
சேலம் மத்திய சிறையில் பிறந்தநாள் கொண்டாடிய போலீசார்
- சேலம் சிறைக் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், சேலம் மத்திய சிறையில் பணிபுரியும் காவலர்களில் இன்று பிறந்தநாள் கொண்டாடும்,
- கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சேலம்:
தமிழக சிறைத்துறை இயக்குனராக அமரேஷ் பூஜாரி பொறுப்பேற்ற பின், சிறை துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சிறை காவலர்கள் நலனில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும், சிறை காவலர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவர்களுக்கு பிறந்தநாள் கேக் மற்றும் சிறைத்துறை இயக்குனரின் வாழ்த்து அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அனைத்து சிறைக் கண்காணிப்பாளர்க ளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சேலம் சிறைக் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், சேலம் மத்திய சிறையில் பணிபுரியும் காவலர்களில் இன்று பிறந்தநாள் கொண்டாடும், முதல் நிலை காவலர்கள் சுரேஷ் கண்ணன், லட்சுமணன், 2-ம் நிலை காவலர்கள் திருநாவுக்கரசு, பாலசுப்பிரமணியன், சிறப்பு நிலை செவிலியர் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.