search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் குற்றங்களை கட்டுப்படுத்த போலீஸ் குழு அமைக்கப்படும்- துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
    X

    கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா பேசினார்.

    தஞ்சையில் குற்றங்களை கட்டுப்படுத்த போலீஸ் குழு அமைக்கப்படும்- துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு

    • கடையின் வெளியே சாலைகள் தெரியும் அளவிற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
    • உங்களுக்கு ரவுடிகளால் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று போலீசார் -வணிகர்கள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமை தாங்கி பேசியதாவது :-

    கடைகளில் யாராவது பொருட்கள் திருடுகிறார்களா என கண்காணிப்பதற்காக கடையின் உள்ளே கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளீர்கள். அதேபோல் கடையின் வெளியே சாலைகள் தெரியும் அளவிற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    அப்படி செய்தால் தான் மர்ம நபர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என கண்டுபிடிக்க முடியும். உங்களுக்கு ரவுடிகளால் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

    உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை கட்டுப்படுத்த போலீஸ் சார்பில் குழு அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வணிகர்கள் கூறும்போது, போலீசாருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். நகரில் இரவு நேரங்களில் அதிக அளவில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும்.

    மாநகரில் 1400 கண்காணிப்பு கேமரா பொருத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அந்த கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

    Next Story
    ×