search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் பொங்கல் சிறப்பு பூஜை
    X

    சிறப்பு அலங்காரத்தில் பவானி அம்மன்.


    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் பொங்கல் சிறப்பு பூஜை

    • புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகன்னியம்மன், பால நாகம்மன், ஆகிய தெய்வங்களுக்கு தை பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • கோவில் முன்பு தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி செங்கரும்பு, காய்கறிகள், பழங்கள், பனங்கிழங்கு படையல் வைத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகன்னியம்மன், பால நாகம்மன், ஆகிய தெய்வங்களுக்கு தை பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மாக்களுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், சவ்வாது மற்றும் 21 வகையான நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பெரிய தீபாரதனை காண்பிக்கப்பட்டது. கோவில் முன்பு தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி செங்கரும்பு, காய்கறிகள், பழங்கள், பனங்கிழங்கு படையல் வைத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை பற்றி கோவில் குருநாதர் சக்தியம்மா பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கப்பட்டது. மதியம் அறுவை அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜையை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×