என் மலர்
உள்ளூர் செய்திகள்
பிரியாணி சாப்பிட்டதால் கர்ப்பிணி சாவு? போலீசார் விசாரணை
- சுதாவிற்கு ராமச்சந்திரன் அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் பிரியாணி வாங்கி கொடுத்தார்.
- ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுதா பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சுதா (வயது 19)நிறைமாத கர்ப்பிணி. இவர் சம்பவத்தன்று பரிசோதனைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துமனைக்கு தனது மனைவியை ராமச்சந்திரன் அழைத்து வந்தார். அங்கு இருந்த டாக்டர்கள் பிரசவத்திற்கு 20 நாட்கள் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையி லிருந்து ராமச்சந்திரன், மனைவி சுதாவுடன் சேத்தூருக்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அலைந்து வந்த கலைப்பினால் சுதாவிற்கு ராமச்சந்திரன் அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் பிரியாணி வாங்கி கொடுத்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு இருவரும் அரசு பஸ்சில் கல்வராயன்மலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது சுதா மயக்கம் அடைந்தார். உடனே ராமச்சந்திரன் சுதாவை அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சையில் சேர்த்தார்.
அங்கு சுதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுதா பரிதாபமாக இறந்தார். பின்னர் சுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. சுதாவுக்கு திருமணமாகி ஓராண்டு ஆவதால், கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி சுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுதா சாப்பிட்ட பிரியாணியால் உயிரிழந்திருக்கலாமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.