search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு  வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்
    X

    தீபாவளி பண்டிகையை ஒட்டி வெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதை படத்தில் காணலாம்.

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

    • சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.
    • இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.இவை மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர். இதனால் அதிக அளவில் வெல்லம் தேவைப்படுவதால், வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வெல்ல சிப்பங்களை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். எனவே வெல்லம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொழிலாளர்கள் இரவு, பகலாக உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயார் செய்து அவ்வப்போது வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×