என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் திட்டப்பணிகள் - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளை 9 வார்டுகள் வீதம் 3 ஆக பிரித்து பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது.
- கூட்டத்தில தமிழக மக்களின் பார்வை அ.தி.மு.க. மீது தான் உள்ளது என்று கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. பேசினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சி நகர் 4-வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி யில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ.22 லட்சத்தில் புதுக்கிராமம் வள்ளுவர் நகர் பகுதியில் சலவைக்கூடம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளை 9 வார்டுகள் வீதம் 3 ஆக பிரித்து பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்டு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் வி.ஏ.ஒ. அவரது அலுவல கத்துக்குள்ளேயே பட்டப்பகலில் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி கொடுப்பதாக அறிவித்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அமைதியாக இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்துவிட்டது. தமிழக மக்களின் பார்வை அ.தி.மு.க. மீது தான் உள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறினர். அப்படி என்றால் 5 ஆண்டுகள் அதாவது 60 மாதங்களுக்கு அவர்கள் தர வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் தான் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். கோவில்பட்டி நகராட்சியில் உள்ள தினசரி சந்தை பிரச்சினையை இவர்களால் தீர்க்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் போது, நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ராமர், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சிவபெருமாள், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் செல்வக் குமார், மார்க்சிஸ்ட் நகர் மன்ற உறுப்பினர் ஜோதி பாசு உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்