என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
- ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.
- மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க ப்பட்டது.
தஞ்சாவூர்:
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை செவித்திறன் குறைபா டுடையோர் மேல்நிலை ப்பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலை மையாசிரியர் சக்கரவர்த்தி, ஜோதி அறக்கட்டளை குழுவினரிடம் இருந்து கல்வி உபகரணங்களை பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக செவித்திறன் குறைபாடுடைய மாணவ- மாணவிகள், தங்களது ஆசிரியர்களுக்கு மலர்கள், இனிப்புகள் கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.
மேலும், அனைத்து ஆசிரி யர்களுக்கும், பணியா ளர்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாணவர்கள் அனைவரு க்கும் நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க ப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பா ர்வையாளர் கல்யாணசு ந்தரம் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.