என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரமடையில் கோழிக்கழிவுகளை சேகரிக்கும் நிறுவனத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
- உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
- கோழிக்கழிவுகளை சேகரித்து இப்பகுதிகளில் கொண்டு வந்து சேகரித்து வைத்து வருகிறார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் எம்.ஆர் நகர், சிவாஜி நகர், அப்துல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. எம்.ஆர். நகர், சிவாஜி நகர் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டின் முன்பு நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோழிக்கழிவுகளை சேகரித்து இப்பகுதிகளில் கொண்டு வந்து சேகரித்து வைத்து வருகிறார்.
அதன்பின் இந்த கழிவுகளை ஒரு கலவையாக்கி சென்னையில் நாய்களுக்கு உணவு தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப் படுவதாக இப்ப குதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். கோழி கழிவுகளால் இப்பகுதி சுற்றிலும் உள்ள பொது மக்களுக்கு காற்று மாசுபடுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்நேரமும் இப்பகுதியினர் தொடர்ந்து வீடுகளை பூட்டி வைத்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுற்றுவட்டார குடியிருப்பு வாசிகள் சம்பந்தப்பட்ட நபரிடம் புகார் தெரிவித்து இதனை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இதையடுத்து இன்று இப்பகுதியில் சேகரித்து வைத்துள்ள கோழிக்கழிவு களை அப்புறப்படுத்த கோரியும் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே இப்பணிகளை மேற்கொள் ளக்கூடாது எனவும் கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வார்டு உறுப்பினர் ராம்குமார் தலைமையில் சம்பந்தப்பட்ட நபரின்வீடு முன்பு குவிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு காரமடை துப்புரவு ஆய்வாளர் வீரபாகு, மேற் பார்வையாளர் கார்த்தி கேயன் ஆகியோர் நேரில் வந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கோழி கழிவுகடிள அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதைய டுத்து குடியிருப்புக்கு நடுவே ஏற்படுத்தி வைத்திருந்த கொட்டகையை கிராம மக்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் 3 மணி நேரத்தில் அப்புறப்படுத்துவதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்