search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம்
    X

    தென்காசியில் கலெக்டர் ஆகாஷ் புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்த காட்சி. 

    தென்காசியில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம்

    • புதுமைப்பெண் திட்ட தொடக்க நிகழ்ச்சி தென்காசி இ.சி.ஈ. மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • அரசு கொண்டுவந்திருக்கும் இந்த வாய்ப்பை மாணவ -மாணவிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

    தென்காசி:

    முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் நேற்று பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    தென்காசி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட தொடக்க நிகழ்ச்சி தென்காசி இ.சி.ஈ. மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

    புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை அறிவித்து உள்ளார். குடும்ப சூழல் மற்றும் வறுமை காரணமாக உயர்கல்வி படிக்க இயலாத மாணவிகளுக்கு இந்த திட்டம் பேருதவியாக அமையும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6 முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவராக இருத்தல் வேண்டும். எனவே பெண் குழந்தைகளின் விருப்பத்தை ஆய்வுகளின்படி அவர்களது மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கும் வகையில் அரசு கொண்டுவந்திருக்கும் இந்த வாய்ப்பை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ -மாணவிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தனுஷ் குமார்எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், ராஜா மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, ஷகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் உதய கிருஷ்ணன்,தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா,தென்காசி ஒன்றியக்குழு தலைவர் ஷேக் அப்துல்லா, கடையம் செல்லம்மாள், செங்கோட்டை திருமலை செல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் வெங்கட்ராம ரவி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×