என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடியில் இந்து வியாபாரிகள் சங்க கூட்டம்
    X

    இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.


    புளியங்குடியில் இந்து வியாபாரிகள் சங்க கூட்டம்

    • புளியங்குடி நகர இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.
    • இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.

    புளியங்குடி:

    புளியங்குடி நகர இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கு குழு ஒன்றை அமைக்கவும், சங்கத்திற்கான நிரந்தர வங்கி கணக்கு தொடங்கவும், கடந்த ஆண்டு புளியங்குடியில் மரக்கடை தீ எரிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டர்களுக்கு இழப்பீடு வழங்க நகரின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களை சந்தித்து நிதி திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிடவும், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


    Next Story
    ×