என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முத்துப்பேட்டையில், நாளை வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்
- முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைக்கிறார்.
- முகாமில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை வட்டார கால்நடைதுறை மருத்துவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷிவிகாஸ் யோஜனா 2022-23-ம் ஆண்டு திட்டம் சார்பில் வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நாளை (29-ந்தேதி) நடைபெறுகிறது.
முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைக்கிறார். இதில் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார், ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா, துணைத்தலைவர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதில் பொதுமக்கள், விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.