search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்
    X

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்

    • தஞ்சையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கத் தவறியது , தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டு ரெயிலை மறிப்பதற்காக மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    ஆனால் அவர்களை ரயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் போலீசார் பேரிகார்டுகள் கொண்டு தடுப்புகள் அமைத்தனர் .

    அப்போது கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாற்று வழியாக ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர்.

    பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அவர்களை போலீசார் வலுக்கட்டா யமாக அப்புறப்படுத்தினர்.

    சிலர் பேரிக்கார்டை தகர்த்து ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களையும் போலீசார் அப்புறப்ப டுத்தினர்.

    ரயில் மறியல் போராட்ட த்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×