search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைவர்-துணைத்தலைவர் இடையே கடும் வாக்குவாதம்
    X

    திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தலைவரிடம், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

    தலைவர்-துணைத்தலைவர் இடையே கடும் வாக்குவாதம்

    • திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தலைவர்-துணைத்தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
    • ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கீழக்கரை

    திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியத்தலைவர் புல்லாணி தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கமிஷனர் ராஜேந்திரன் வரவேற்றார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

    கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி:- தமிழக அரசு தற்போது பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் வர்ணம் பூசுதல், மராமத்து உள்பட 80 பணிகள் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டது.

    ஆனால் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க. சேர்மன் எதிர் கட்சி சேர்மன்போல் செயல்படுகிறார். "தி.மு.க. சேர்மனா அல்லது எதிர்கட்சி சேர்மனா" என்பதை தெளிவுபடுத்த வேண்டும். குழப்பம் ஏற்படுத்தி பள்ளிப் பணியை நிறுத்திவிட்டார். இந்த திட்டத்தை திசை திருப்புவதற்கு காரணம் என்ன?

    தலைவர்:- நான் எந்த சேர்மன் என்று மக்களுக்கு தெரியும்.

    துணைத்தலைவர் சிவ லிங்கம்:- திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மிகவும் மோசமாக செயல்படுகிறது. இங்கு தி.மு.க. சேர்மனா? அல்லது அ.தி.மு.க.சேர்மனா? என்பது குழப்பமாக உள்ளது எந்த கட்சி சேர்மன் என்றே தெரியவில்லை?

    கவுன்சிலர் பைரோஸ் கான்:- டெண்டர் வைத்து ரத்து செய்ததற்கான காரணத்தை முதலில் கூறுங்கள். பள்ளி வர்ணம் பூசுதல் குறித்து கடந்த 4 மாதங்களுக்கு மேலாகவே உரிய நடவடிக்கை மேற் கொண்ட நிலையில் தற்போது நிறுத்தியது ஏன்?

    கவுன்சிலர் பைரோஸ் கான்:- என்னை ஓட்டு போட்டு வெற்றி பெறச்செய்த மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இங்கு நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளால் நான் கடந்த 3 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே செல்லவில்லை.

    துணைத்தலைவர் சிவ லிங்கம்:- எதற்கெடுத்தா லும் தலைவர் தடை போடக்கூடாது. நாங்கள் கேட்பது உங்கள் சொந்த நிதியை அல்ல, அரசு நிதியைத்தான் திட்ட பணி களுக்கு ஒதுக்கீடு செய்ய கேட்கிறோம்.

    இதைத்தொடர்ந்து தலை வர், துணைத்தலைவரை ஒருமையில் பேசியதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே துணைத்தலைவர் அவரது இருக்கை விட்டு எழுந்து பார்வையாளர் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டார். மதியம் 12 மணிக்கு தொடங்கிய ஒன்றிய கவுன்சில் கூட்டம் 2½ மணிநேரம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.79 லட்சம் மதிப்பில் 61 பணிகளுக்கு வருகிற 28-ந் தேதி டெண்டர் விட முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தொடங்கியது முதல் கடைசி வரை தொடர்ந்து தலைவருக்கு எதிராக விவாதங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தி.மு.க.கவுன்சிலர்கள்- தி.மு.க.சேர்மன் இடையே பணிகள் குறித்து கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்த நிலையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு தேவையான பணிகளை செய்ய வற்புறுத்தாமல் கூட்டம் முடியும் வரை மவுனம் காத்தது புரியாத புதிராக இருந்தது.

    Next Story
    ×