என் மலர்
உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
- பரமக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
- அ.தி.மு.க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பரமக்குடி
பரமக்குடியில் காந்திசிலை முன்பு அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, குப்புசாமி, காளிமுத்து, பரமக்குடி அவைத்தலைவர் சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் எம்.கே.ஜமால் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.
இக்கூட்டத்தில் அ.தி.மு.க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பு பேச்சாளர்களாக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, டாக்டர் முத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் பாலாமணி மாரி மற்றும் நிர்வாகிகள் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் அனிதா முருகேசன், நகர்மன்றத் உறுப்பினர்கள் ஜெய்சங்கர், கண்ணன் உட்பட ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர் அம்மா பேரவை செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான வடமலையான் நன்றி கூறினார்.