search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர்குடி பெண் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
    X

     பழமையான உயர்குடி பெண் நடுகல்.

    உயர்குடி பெண் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

    • பரமக்குடியில் உயர்குடி பெண் நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இந்த நடுகல் சிற்பம் 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் வழிமறிச்சான் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சிசுந்தரம் மற்றும் வழிமறிச்சானை சேர்ந்த சிவா, சக்தி, முருகன் ஆகியோர் பரமக்குடி அருகே உள்ள வழிமறிச்சான் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் உயர் குடியைச் சேர்ந்த மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பதை கண்டறிந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    பொதுவாக நடுகல் என்பது முற்காலங்களில் வீர, தீர செயல்களான போர்களில் ஈடுபடும் வீரர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கு எதிரான சண்டைகளில் வெற்றி பெறுபவர்களுக்கோ அல்லது சண்டையில் இறப்பவர்களுக்கோ அல்லது சமூகத்தில் பெரிதும் போற்றத்தக்க நபர்களுக்கோ நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்தது.

    தற்போது கண்டறிந்த சிற்பமும் அந்த வகையைச் சேர்ந்ததாகும். இந்த நடுகல் சிற்பம் 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் 2 கைகளிலும் காப்பும், கை வளையல்களும் அணிந்தபடியும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், ஆபரணங்களும் நீண்ட காதும் தெளிவாக செதுக்க ப்பட்டுள்ளன.

    இடையில் இடைக்கச்சை அணிந்த படியும், இரு கால்களிலும் கழலைகள் அணிந்தபடியும் சிற்பம் நேர்த்தியாக வடிக்க ப்பட்டுள்ளது. இடது கையில் ஊன்றுகோல் தடியை பிடித்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. நெற்றியில் திலகம் செதுக்கியிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

    இந்த புடைப்பு சிற்பம் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டியின் சிற்பமா கும். இந்த சிற்பத்தின் வடிவ மைப்பும், அணிந்துள்ள ஆபரணங்க ளையும் வைத்து பார்க்கும் போது உயர் குடியைச் சேர்ந்த பெண்ணாகவோ அல்லது சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க பெண்மணியாகவோ இருந்திருக்கலாம். இந்த நடுகல்லை பாட்டி கிழவி அம்மன் என்ற பெயரில் அந்தப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×